முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வராயன் மலை மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வறிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு வரும் 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் ஆய்வுகளை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 21-ம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், கல்வராயன் மலைப்பகுதி வனத்துறையின் கீழ் வருவதால் வழக்கில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வனத்துறை தரப்பில் தனியாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து