Idhayam Matrimony

கொலை மிரட்டல்: ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Amrstrong

Source: provided

சென்னை : கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டு காவலில் உள்ளனர். 

கைதான திருவேங்கடம் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்துடன், ஆம்ஸ்ட்ராங் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து