எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சுவா : பிஜி நாட்டிற்கு சென்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன்படி அவர் பிஜி நாட்டுக்கு நேற்று சென்றடைந்து உள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தில், முர்மு அந்நாட்டு அதிபர் ரது வில்லியம் மைவாலிலி கடோனிவியர் மற்றும் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோரை சந்தித்து இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார். அந்நாட்டில் இன்று வரை தங்கியிருக்கும் அவர், இந்த பயணத்திற்கு பின்னர் நியூசிலாந்து மற்றும் திமோர்-லெஸ்தேவுக்கு செல்கிறார்.
இந்தியாவில் இருந்து பிஜி தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி முர்முவால், இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று உறவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த பயணத்தின்போது, பிஜி நாட்டின் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
இதே போன்று, இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாட உள்ளார். இதன்பின்பு, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் சின்டி கிரோவின் அழைப்பின்பேரில் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு, கிரோ மற்றும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோருடன் இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


