முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி மாளிகை பூங்காவுக்கு வரும் 16-ம் தேதி முதல் அனுமதி

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      இந்தியா
Park 2024 08 07

Source: provided

புதுடெல்லி : வரும் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகையில் உள்ள அம்ரித் உத்யன் பூங்கா திறக்கப்படுகிறது.

 டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களை உடையது. 340 அறைகள் உள்ள இந்த மாளிகையில், 190 ஏக்கர் பரப்பளவில் தோட்டமும் உள்ளது. முதல் பிரிவில், ஜனாதிபதி மாளிகையின் பிரதான கட்டிடம் மற்றும் கணதந்திர மண்டபம், அசோக் மண்டபம் உள்ளன. இரண்டாம் பிரிவில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகம் உள்ளது.

மூன்றாம் பிரிவில், புகழ் பெற்ற தோட்டங்களான அம்ரித் உத்யன், மூலிகைத் தோட்டம், இசைத் தோட்டம் மற்றும் ஆன்மிகத் தோட்டம் உள்ளன. வரும் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகையில் உள்ள அம்ரித் உத்யன் பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அன்று விளையாட்டு வீரர்கள் பார்வையிட பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அன்று ஆசிரியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். பூங்காவை வரும் 14-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். இதற்காக https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து