எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சுதந்திர தினத்தையொட்டி நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு, நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, நெல்லையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 18-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06020) மறுநாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
மறுமார்க்கமாக (வண்டி எண்: 06019) செங்கல்பட்டில் இருந்து வருகிற 14 மற்றும் 19-ந்தேதி ஆகிய நாட்களில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.
இதேபோல், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 18 மற்றும் 25-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06012) அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து (வண்டி எண்: 06011) ரெயில் வருகிற 19 மற்றும் 24-ந்தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


