முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செல்லும் முதல்வர் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இதன்படி முதல்வரின் அமெரிக்க பயணத்தின்போது பல முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயா்த்துவதே எங்களது அரசின் லட்சியம். தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது, இருந்து வருகிறது. அத்தகைய தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக உருவாக்குவதே எங்களது குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறேன். தொழில்புரட்சி 4.0 மின் வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள், காற்றாலை கலன்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்துறைப் புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் நான்காவது தொழிற்புரட்சி நமது மாநிலத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும்" என்று அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், இந்த பயணித்தின் போது, அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எத்தனை நாள் பயணம் என்பது குறித்த விரிவான தகவல் முதல்வர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 10 நாள்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று வந்தது குறுப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து