எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ, உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்து வருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷ்யாவிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.
சீனா ரஷ்யாவுடன் இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும் போது விலகி நிற்கிறது. இந்தியா உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் நட்பு நாடாக விளங்குகிறது. சமீபத்தில் ரஷ்யாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார்.இதனால் உக்ரைன்- ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்.இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் போரின் முதல் வாரங்களில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே எட்டப்பட்ட பூர்வாங்க ஒப்பந்தம் ஒருபோதும் செயல்படுத்தப்படாது. அவை பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


