முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்: பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      இந்தியா
Murugan 2024-02-14

புது டெல்லி, திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பும், பாராட்டும் குவிந்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் எல். முருகன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். 

அதன்படி தற்போது அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம், முதலாவது திருவள்ளுவர் கலாசார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மையம் மூலம், திருக்குறள் சிறப்பு, தமிழ் மொழியின் இலக்கிய வளம், கலாசார சிறப்புகள் குறித்து வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. 

 மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில்,  உலகில் முதல் முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என்று  அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற அனைத்து தமிழர்கள் சார்பாகவும் முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்கள் பெருமை கொள்ளும் விதமாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பின் மூலமாக, பன்னெடுங்கால பழமை வாய்ந்த தமிழர் கலாசாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 

பன்முகம் கொண்ட இந்தியாவின் பழமையான வரலாற்றில், உலகின் மிகவும் தொன்மையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது என்று எப்போதும் கூறி வரும்   பிரதமர், தற்போது தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

சிங்கப்பூரில் அமையவிருக்கிற இந்த கலாசார மையமானது, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும். பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தேசங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும், இந்த கலாசார மையம் செயல்படும்.  

முன்பு, பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தும், ஐ.நா. சபை போன்ற உலகின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தி வரும் நமது .பிரதமரின் குறிப்பிடத்தக்க சாதனையாக இந்த அறிவிப்பை பார்க்கிறோம். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, இவற்றை வளர்க்கவும், பேணி காக்கவும், திருவள்ளுவர் கலாசார மையம் ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து