Idhayam Matrimony

2-வது சீசன் துவக்கம்: குன்னூர்- ஊட்டி, ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      தமிழகம்
Ooty-train-2023-12-14

ஊட்டி,  இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள நிலையில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு குன்னூர் - ஊட்டி, ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் வரும் 7,8 மற்றும் 14,15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. 

நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுபாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணித்து மகிழ்கின்றனர்.

இந்த நிலையில் இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக செல்ல ஏதுவாக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. 

இதன்படி குன்னூர் -  ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவை 7,8 மற்றும் 14, 15-ம் தேதிகளில் குன்னூர் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. குன்னூரில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும். 

மேலும் ஊட்டி- கேத்தி- ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. முதல் சுற்று ஊட்டியில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும். 

இரண்டாவது சுற்று 11.30 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும். மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். மாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும். 

இரு சேவைகளிலும் முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும். சிறப்பு மலைரயிலில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து