முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்யுத்த வீரர்களின் போராட்ட பின்னணியில் காங்கிரஸ் கட்சி: மல்யுத்த சம்மேளன தலைவர் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      இந்தியா      விளையாட்டு
Wrestling-Federation-2024-0

புதுடில்லி, 'மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருந்தது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது' என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகிய இருவரும் காங்கிரசில் இணைந்தனர். இது குறித்து, மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது., மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரசில் இணைந்தது, போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருந்தது என்பதற்கு சான்றாகும். முழு போராட்டமும் காங்கிரஸ் கட்சியின் உத்தரவின் பேரில்தான் நடந்துள்ளது. முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பா.ஜ.,வுடன் தொடர்புடையவர்.

நான் எந்த கட்சியிலும் இல்லை. ஆனால் என்னையும் மல்யுத்த வீரர்கள் எதிர்த்தனர். இந்த போராட்டம் முழுவதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்கு மூளையாக ஹூடா குடும்பத்தை சேர்ந்தவர்கள் செயல்பட்டனர். போராட்டத்தை கண்டு பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் விலகிவிட்டார். எனவே பிரச்னை அப்பொழுது முடிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் சதி காரணமாக முடிவுக்கு வரவில்லை. ஒலிம்பிக்கில் இரண்டு வருடங்களாக மல்யுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எங்கள் மல்யுத்த வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் குற்றச்சாட்டிற்கு எதிராக, டில்லியில் வீதியில் இறங்கி மல்யுத்த வீராங்கனைகள் ஒரு மாதத்திற்கு மேலாக போராடினர். ஆனால் தற்போது வினேஷ், பஜ்ரங் காங்கிரசில் இணைந்துவிட்டதால், போராட்டம் எல்லாம் ஒரு சதி திட்டம் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து