முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு : 3 பேரை தேடும் பணி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      தமிழகம்
Kollidam 2024-09-08

Source: provided

தஞ்சாவூர் : கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 18 பேர் கடந்த 5-ம் தேதி வேளாங்கண்ணி திருவிழாவுக்குச் சென்று விட்டு, நேற்று காலை 7 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவிலுக்கு சென்றனர். 

இந்த நிலையில் அவர்களில் 12 பேர் கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.  அவர்களில் கிஷோர் (20), கலையரசன் (20) ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து மாயமான பிராங்கிளின் (23), ஆண்டோ (20), மனோகரன் (19) ஆகியோரை தேடும் பணியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து