எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேரள மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்டவைகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டியை அரசு அமைத்தது. அதன் விசாரணை அறிக்கையில் பட வாய்ப்புக்காக பல நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நடிகைகளின் பாலியல் புகார்களின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்த நிலையில் நடிகைகள் புகாரின் பேரில் நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக கேரள ஐகோர்ட் சிறப்பு பெஞ்ச் அமைத்தது. தற்காலிக தலைமை நீதிபதி முகமது முஸ்தாக், நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், சுதா ஆகியோர் அந்த பெஞ்சில் இடம்பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை சிறப்பு பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஹேமா கமிட்டி அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காத கேரள அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-
இந்த வழக்கில் புகார் அளித்தவர் வழக்கை தொடர விரும்பவில்லை என்றால் அதை மதிக்க வேண்டும். அறிக்கையின் ரகசியத்தன்மை பேணப்பட வேண்டும். புகார் கொடுப்பவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மன அழுத்த சூழ்நிலை இருக்கக் கூடாது. அவர்களின் தனியுரிமை முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வு குழுவின் மீது அவசர நடவடிக்கை இருக்கக் கூடாது.
சிறப்பு புலனாய்வு குழுவிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் உள்பட தாங்கள் விசாரிக்கும் விஷயங்கள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டாம். பெரும்பான்மையான பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொண்ட போதிலும், அவற்றை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது.
இந்த விஷயத்தில் அரசு ஏன் செயலற்று மவுனமாக இருந்தது?. அரசு தரப்பில் பயங்கரமான செயலற்ற தன்மை உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. ஒரு குற்றம் நடந்திருந்தால் அதை விசாரிக்க வேண்டும் என்பது பொது அறிவு. அது நடக்கவில்லை. பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கான உண்மை அந்த அறிக்கையில் உள்ளது. புகாருடன் காவல் துறையை அணுகினால் 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்படுமா? இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் பல்வேறு உத்தரவுகளையும் ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


