முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா சட்டசபை தேர்தல்: 2- வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா      அரசியல்
Aam-Aadmi 2024-09-10

புது டெல்லி, அரியானா சட்டசபை தேர்தலையொட்டி தனது 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த திங்களன்று ஆம் ஆத்மி வெளியிட்டது.  இந்த நிலையில்,  ஆம் ஆத்மி தனது 2- வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஹென்ரி, சதௌரா, தானேசர், ரதியா, அதம்பூர், பர்வாலா, டைகான், பரிதாபாத் மற்றும் பவால் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஹவா சிங் ஹென்ரியிலும், பிரவேஷ் மேத்தா பரிதாபாத்திலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம்  அரியானா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் சுஷில் குப்தா கூறுகையில்,

ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முழு பலத்துடன் போட்டியிடும்.  அரியானாவை குற்றங்களின் தலைநகராக பா.ஜ.க. மாற்றி உள்ளது. அரியானாவில்  வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கியுள்ளன. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அரியானாவின் மகன் என்று தெரிவித்தார். 

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை 12-ம் தேதி கடைசி நாளாகும்.  90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு  அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டன. பொதுத்தேர்தலில், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு இடத்தை வழங்கியது, அதுவும் தோல்வியடைந்தது. கடந்த 2019 அரியானா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து