முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா வெள்ள பாதிப்பு: நிதி உதவி வழங்கிய நடிகர் சிம்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      சினிமா      தமிழகம்
Simbu 2024 09 10

சென்னை, ஆந்திரா, தெலுங்கானாவில் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு 6 லட்ச ரூபாய்   வழங்கியுள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலுங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் , பிரபாஸ்,  மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதவினர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு 6 லட்ச ரூபாய்  நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.  தமிழ் நடிகர் ஆந்திராவில் நடந்த பேரிடருக்காக நிதிக் கொடுத்தது மிகவும் பெருந்தன்மையான விஷயம் என்று நெட்டிசன்கள் சிம்புவை பாராட்டி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து