முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எம்.ஸ்ரீ. பள்ளி விவகாரத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம்: ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      தமிழகம்
OPS 2022 12 29

சென்னை, பி.எம்.ஸ்ரீ பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தேர்தல் வாக்குறுதிகள், தமிழகத்தின் உரிமை, மாநில சுயாட்சி என அனைத்திலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. இதே நடைமுறையை பிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதிலும் தி.மு.க. அரசு கையாண்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை சமூகநீதி, கூட்டாட்சி மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது எனத் தெரிவித்து, அதனை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று கூறியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.  தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கென தனியே மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்காக குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறவே 3 ஆண்டுகள் ஆனது. இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்பே, பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு தலைமைச்செயலர் எழுதிய கடிதத்தில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதில் தமிழகம் மிகவும் ஆர்வமாக உள்ளதாக கூறி, புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024-25ல் போடப்படும் என குறிப்பிட்டு 2023-24ம் ஆண்டுக்கான நிதியை விடுவிக்க கேட்டுக் கொண்டார். இது தி.மு.க. அரசின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவின் பரிந்துரை விவரத்தை தி.மு.க. அரசு மக்களுக்கு ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை வெளிப்படையாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து