முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைதூரக் கல்வி சேர்க்கை வரும் 20-ம் தேதி வரை நீட்டிப்பு: இக்னோ பல்கலை. அறிவிப்பு

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      தமிழகம்
IGNOU-University 2024-09-11

சென்னை, தொலைதூரக் கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மத்திய அரசு பல்கலைக் கழகமான இக்னோ, தொலைதூர்க் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மாணவர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு, ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி செப்டம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி வருகிற 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த கடைசி நேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவல்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) விரிவாக அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் விவரங்கள் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து