முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 17-ம் தேதி முப்பெரும் விழா: தி.மு.க. சாதனைகள் குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்      அரசியல்
DMK-Offces 2023 03 31

சென்னை, சென்னையில் வரும் 17-ம் தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழா நடக்கிறது. இதில் தி.மு.க.வின் சாதனைகள் குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பெரியார்-அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள் என ஆண்டுதோறும் தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா என்பதால் முப்பெரும் விழா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவள விழா ஆண்டை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளன. 

ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - மிசா ராம நாதன், கலைஞர் விருது - ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன், மு.க.ஸ்டாலின் விருது - தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகி யோருக்கு வழங்கப்படுகிறது.இவை மட்டுமின்றி ஒன்றிய, நகர, பேரூர், பகுதி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பணமுடிப்பு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படுகிறது.

பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் உள்பட பலர் பேசுகின்றனர். மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து