முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
kilambakkam-new-railway-sta

சென்னை, கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. வெளியூர் செல்லும் அனைத்து விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும் கிளாம்பாக்கம் செல்ல மாநகர பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் ரெயில் வசதி இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி மாநில அரசு மற்றும் ரெயில்வே இணைந்து சுமார் ரூ.120 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பஸ்நிலையத்திற்கு நேர் எதிராக உள்ள இடத்தில் இந்த ரெயில் நிலையம் அமைய உள்ளது.

மேலும் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் உயர்மட்ட நடை மேம்பாலமும் ரூ.79 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன. இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய ரெயில்நிலையம் அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததாமல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து நேற்று முதல் புதிய ரெயில் நிலையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிய ரெயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் வர உள்ளன. இதில் 2 நடைமேடைகள் மின்சார ரெயில்களுக்கும், ஒருநடைமேடை எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. 

இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 

நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் ரெயில் நிலைய கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டடது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அது சரி செய்யப்பட்டது. 

தற்போது ரெயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, நடைமேடைக்கு மண் நிரப்பும் பணிகள் தொடங்கி உள்ளன.

 அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது பயணிகளின் போக்குவரத்து வசதி மேலும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து