முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

டெல்லி : அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் அந்தமான் நிகோபார் தீவுகள். இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது. இந்நிலையில், தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காலனி ஆதிக்க (ஆங்கிலேய ஆட்சியின்) முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் உத்வேகம் பெற்று போர்ட் பிளேயர் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். சோழ பேரரசின் கடற்படை தளமாக செயல்பட்ட அந்தமான் நிகோபார் தீவுகள் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஈடுஇணையற்ற இடம்பிடித்துள்ளது. தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தளமாகவும் திகழ்கிறது' என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து