முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தல்: நேரடி விவாதத்திற்கு பின் கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      உலகம்
Kamala-Harris---Trump-2024-

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் செல்வாக்கு நேரடி விவாதத்திற்கு பிறகு மேலும் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

இருவரும் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய நிலையில், மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை முடிவு செய்ய அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. கடந்த 10-ம் தேதி இரு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் நேரடி விவாதம் மற்றும் அதற்கு முன்பு நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார். குறிப்பாக நேரடி விவாதத்திற்கு பிறகு 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்களும், டிரம்புக்கு ஆதரவாக 42 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். வித்தியாசம் 5 சதவீதம் இருந்தது.

நேரடி விவாதத்திற்கு பிறகு எகனாமிஸ்ட் மற்றும் யூகோவ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 4 சதவீத வித்தியாசத்துடன் முன்னிலையில் இருக்கிறார். கமலா ஹாரிஸ் 49 சதவீத வாக்காளர்களின் ஆதரவையும், டிரம்ப் 45 சதவீத வாக்காளர்களின் ஆதரவையும் பெற்றனர். 

நேரடி விவாதத்திற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 2 சதவீத வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்ற நிலையில், விவாதத்திற்கு பிறகு அவரது செல்வாக்கு மேலும் அதிகரித்திருப்பதையே கருத்துக் கணிப்பு காட்டுகிறது. 

இதே போல் ரியல் கிளியர் பாலிட்டிக்ஸ், பைவ்தர்ட்டிஎய்ட், சில்வர் புல்லட்டின் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து