Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      இந்தியா
Poleis 2023-09-29

Source: provided

போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த காவலர் 2011ஆம் ஆண்டு போபால் காவல்துறை பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பிறகு, அவர் சாகர் காவல்துறை பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சென்று சேராமல், நேராக விதிஷாவில் உள்ள வீட்டுக்கு வந்துவிட்டார். தனது உயர் அதிகாரிகள் யாரிடமும் விடுப்பு கேட்காமல், தன்னுடைய பணி ஆவணங்களை விரைவுஅஞ்சல் மூலம் போபால் காவல்துறைக்கு அனுப்பியிருக்கிறார். அங்கு அந்த ஆவணத்தை எந்த விசாரணையும் இன்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மாதந்தோறும் அவருக்கு சம்பளம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தலைமைக் காவலரும் சப்தமே இல்லாமல் மாத ஊதியத்தை செலவு செய்திருக்கிறார். காவல்நிலைய வாசலுக்கே செல்லாமல், இதுவரை அவர் ரூ.28 லட்சம் வரை ஊதியமாக பெற்றுள்ளார். 

கடந்த 2023ஆம் ஆண்டு காவலர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பரிசீலித்த போதுதான் ஒரு நாள் கூட காவலராக பணியில் சேராத ஒருவருக்கு கடந்த 12 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டு வந்ததே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த தலைமைக் காவலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் தான் மனநலன் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததாக பதிலளித்துள்ளார். அதற்குரிய ஆவணங்களையும் அளித்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து