எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெய்ரூட் : தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
ஹமாசுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரும் துணையாக இருந்து வருகின்றனர். லெபனானில் இருந்து அவ்வப்போது இஸ்ரேல் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தெற்கு லெபனான் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் இடமாகவும், வீடுகளில் சுரங்க பாதைகள் அமைத்தும், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது.
இதனால் பாதுகாப்பு கருதி ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்பு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். தங்களது இருப்பிடம் பற்றி வெளியில் தெரியாது என்பதற்காக அவர்கள் இதை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியது. இதன் தொடர்ச்சியாக வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த புது விதமான தாக்குதல் லெபனான் நாட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டி தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. தொலை தொடர்பு கருவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் வாயிலாக அனைத்து வரம்புகளையும் இஸ்ரேல் மீறி விட்டதாகவும், இந்த தாக்குதலால் கடும் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிகளை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 8 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினரும் அதிரடி தாக்குதலில் இறங்கினார்கள். தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தினார்கள்.
போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசினார்கள். இந்த குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதில் உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததால் லெபனானில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். சைரன் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. எல்லைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவா கேலண்டர் தெரிவித்துள்ளார். போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா போர் தொடங்கிய பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர். இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே முழுமையாக போர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.