எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பென்சில்வேனியாவில் நேற்று பிரச்சாரம் செய்த டிரம்ப், அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், காவல்துறை கடுமையான அடக்குமுறையை கையில் எடுத்து குற்றச்செயல்களை ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வின்கான்சின் மாநிலத்தில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்த போது, புலம்பெயர்ந்தோரின் வன்முறை மற்றும் பிற குற்றவாளிகளின் படையெடுப்பால் அமெரிக்கா சிதைந்து வருகிறது என இனரீதியான குற்றச்சாட்டுகளை மீண்டும் வெளிப்படுத்தினார்.
மேலும் பல்வேறு விஷயங்களில் ஜோபைடன் அரசு தோல்வியடைந்து விட்டது என்றும், எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க கமலா ஹாரிசால் எதையும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் திருடர்கள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடப்பதாக கூறிய அவர், இந்த விஷயத்தில் காவல்துறை முரட்டுத்தனமாக செயல்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு பாடம் புகட்டவேண்டும். ஆனால், காவல் துறையினர் தங்கள் பணியை செய்ய அனுமதிப்பதில்லை. ஏனென்றால், தாராளவாதிகள் அவர்களை அனுமதிக்க மாட்டார்கள் என்றார். மேலும் ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் டிரம்ப் விமர்சனம் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


