எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்ததாக துரைமுருகன் அமைச்சரவையில் 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக கடந்த 3 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசாணையையும் தமிழக அரசு நேற்று (செப்.30) வெளியிட்டுள்ளது. அதில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு 4-வது இடத்திலும் ஐ.பெரியசாமி 5-வது இடத்திலும் பொன்முடி 6-வது இடத்திலும், ஏ.வ.வேலு 7-வது இடத்திலும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் தொடர்ந்துள்ளன. புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு 27வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு 21-வது இடமும், டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33-வது இடமும் கயல் விழிக்கு 35-வது இடமும் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


