முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தேர்தல்: முதன்முறையாக வாக்களித்த வால்மிகி சமூகத்தினர்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Kashmir 2024-03-29

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் எல்லை அருகே வசித்து வரும் வால்மிகி சமூகத்தினர் முதன்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் இந்த தேர்தலில் வால்மிகி சமூகத்தினர் முதன்முறையாக தங்களது ஜனநாயக உரிமையான வாக்குகளை செலுத்தியுள்ளனர். இது ஒரு வரலாற்று தருணம் என அவர்கள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர். 

1957-ம் ஆண்டு மாநில அரசால் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்புரில் இருந்து துப்புரவு பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள்தான் இந்த வால்மிகி சமூகத்தினர். 

நான் எனது 45 வயதில் முதன்முறையாக வாக்களித்துள்ளேன். முதன்முறையாக ஆர்வத்துடன் வாக்கு மையம் வந்து வாக்களித்துள்ளோம். இது ஒரு திரில்லான அனுபவமாக உள்ளது. இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய திருவிழா போன்று உள்ளது என ஜம்முவில் வாக்களித்த காரு பாத்தி என்பவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சமூகத்தினருக்கு குடியுரிமை பாதுகாப்பு பெற 15 வருடங்கள் முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்த காரு பாத்தி, ஒட்டுமொத்த வால்மிகி சமூகத்தினருக்கும் இது ஒரு திருவிழா. 80 வயது தாத்தா முதல் 18 வயது இளைஞர்  வரை தற்போது வாக்களித்துளோம். 

இரண்டு தலைமுறையினருக்கு இங்கு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது, குடியுரிமை கிடைத்தது. எங்களுக்கான நீதி வென்றது.பல தசாப்பதங்களாக எங்களுடைய சமூகம் துப்புரவு பணிக்காக இங்கு அழைக்கப்பட்டு வந்தனர். ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன என்றார். 

வால்மிகி சமூகத்தினருடன் மேற்கு பாகிஸ்தான் அகதிகள், குர்கா சமூகத்தினர்கள் என சுமார் 1.5 லட்சம் பேர் உள்ளனர். ஜம்மு, சம்பா, கத்துவா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். முக்கியமாக எல்லைப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

சுமார் 12 ஆயிரம் பேர் காந்தி நகர் மற்றும் டோக்ரா ஹால் பகுதிகளில் வசித்து வருகின்றனர். வாக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, நில உரிமை போன்ற உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து