எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இனிவரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல புதிதாக எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்கக் கூடாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 58 இடங்களில் வரும் அக்.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், 42 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்றும், 16 இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் புதிதாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்துவது குறித்தும் காவல்துறை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் 10 இடங்களில் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள மாங்காடு, கொரட்டூர், தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள மேடவாக்கம், சேலையூர், கோவை ரத்தினபுரி, தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் ஆகிய இடங்களில் அணிவகுப்பை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “மாங்காடு, ரத்தினபுரி, கொரட்டூரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தை தங்களது பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி வழங்க மறுத்துள்ளது என்பதால் அந்த இடங்களிலும், மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதாலும், சேலையூரில் பேருந்து செல்லும் மெயி்ன்ரோட்டில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரியதாலும், குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை நடந்து வருவதால் சாயர்புரத்திலும் அனுமதி வழங்கவில்லை” என விளக்கமளித்தார். அதையடுத்து நீதிபதி, ‘‘ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி. எதிர்கொள்கை கொண்ட பகுதி எனக் கூறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கக்கூடாது. பொது சாலை என்பதற்காகவும் அனுமதி மறுக்கக்கூடாது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதமே இந்த நீதிமன்றம் நிபந்தனைகளை வகுத்து விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த நிபந்தனைகளைப் பின்பற்றி இனிவரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல புதிதாக எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்கக் கூடாது.
அனுமதி மறுக்கப்பட்டுள்ள மாங்காடு, ரத்தினபுரி மற்றும் கொரட்டூர் பள்ளி நிர்வாகத்திடம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கடிதம் வாங்கி கொடுத்தால் அங்கு அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். சாயர்புரத்தில் வரும் அக்.20-ம் தேதியன்று ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளதால் அங்கு அனுமதி வழங்க வேண்டும். கடந்தாண்டு சேலையூரில் ஊர்வலம் நடத்தப்படாத நிலையில் சிட்லபாக்கத்தில் அனுமதி கோரினால் அனுமதி வழங்க வேண்டும். மேடவாக்கத்தில் மாற்று வழியில் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


