Idhayam Matrimony

காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      தமிழகம்
School-Education 2022 02 11

சென்னை, காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்.28-ம் தேதி முதல் அக்.6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது; அவ்வாறு நடத்தினால் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தநிலையில், சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல் ராசிபுரம், கோவை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோரின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விடுமுறை நாள்களில் வகுப்புகள் வாரியாக எடுக்கப்படும் வகுப்புகள் குறித்த அட்டவணை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கல்வித் துறையின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்துவதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன. விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து