எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பாராளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். அதில் தேசத் தந்தை முகத்தில் விழிக்காத பாசிஸ்டுகள் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காந்தியின் திரு உருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களுக்கு இருந்த தலைவரின் சிலைகள் கட்டிடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பாஜக அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அந்த வகையில் தற்போது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாராளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள். நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான். என்றென்றும் வணங்குகிறோம் உன்னை. என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


