முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணி செய்த பிரதமர் மோடி

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      இந்தியா
PM-Modi-1-2024-10-02

புதுடெல்லி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பள்ளி யின் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களை மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதுகுறித்து மோடி எக்ஸ் வலைதளத்தில் கூறும் போது, காந்தி ஜெயந்தி நாளில் (நேற்று) எனது இளம் நண்பர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை நான் மேற்கொண்டேன். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

மற்றொரு பதிவில், (நேற்று) தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம். இது இந்தியாவை தூய்மை செய்ய மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வ தற்கான முக்கிய முயற்சி யாகும். இந்த திட்டம் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என்று கூறினார். 

இதையடுத்து டெல்லியில் விக்யான் பவனில் நடந்த தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது., கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியர்கள் தூய்மை இந்தியா பணியை தங்கள் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது, தூய்மை இந்தியா திட்டம் நினைவு கூரப்படும்.

இந்த நூற்றாண்டில், தூய்மை இந்தியா திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. தூய்மை இந்தியா பிரசாரம் என்பது தூய்மை இயக்கம் மட்டுமல்ல, செழுமைக்கான புதிய பாதையாகும். தொடர் முயற்சிகள் மூலம் இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும். பள்ளிகளில் தனி கழிப்பறை கட்டியதால் பெண் குழந்தைகள் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து