எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல் அவிவ், இஸ்ரேல் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கிழக்குபகுதி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக இருப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருக்கு ஈரான் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில்ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஈரானுக்குதக்க பதிலடி தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடனும் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய், எரிவாயு மற்றும் அணு உலை தொடர்பான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த நாட்டின் பொருளாதாரம் சீரழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விரைவில் கொன்று விடுவோம் என ஈரான் உளவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே பிரான்ஸ், இஸ்ரேல் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கிழக்குபகுதி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


