Idhayam Matrimony

விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது: சிறைகளில் குற்றவாளிகளை சாதிய ரீதியில் வகைப்படுத்தக்கூடாது 11 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: சிறை விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், சிறைகளில் குற்றவாளிகளை சாதிய 

ரீதியில் வகைப்படுத்தக்கூடாது  என்று 11 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் சாதிய பாகுபாடு காண்பிக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்தள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகளை அவர்களது சாதிய பின்புலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி வைத்திருப்பது, சிறைகளில் மிக மோசமான வேலைகளை செய்ய சொல்வது, பாகுபாடுடன் நடத்துவது என்பது பல்வேறு மாநிலங்களின் சிறை விதிமுறைகளிலேயே அமலில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 11 மாநில சிறைகளில் சாதிய ரீதியிலான அணுகுமுறை விதிகளை ரத்து செய்ய உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், "தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சாதிய ரீதியில் வகைப்படுத்தக்கூடாது. சாதிய ரீதியில் வகைப்படுத்திய பதிவுகள் சட்ட விரோதமானவை. அவை அழிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட மாநிலங்கள் வகுத்துள்ள சிறை விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக இருக்கிறது. தற்போதைய தீர்ப்பின்படி, சிறை விதிகளில் மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தண்டனை குறைப்பு, சிறைகளை சுத்தம் செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது. எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது. அப்படி சிறையில் சாதிய பாகுபாடு காண்பிக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து