முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      இந்தியா
Ratan-Tata-2024-10-10

மும்பை, ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பழம்பெரும் இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில்,  மருத்துவ சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.   

இந்நிலையில், மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மந்திரி சபை நேற்று கூடியது.  இந்த கூட்டத்தில், மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.  மேலும் அந்த தீர்மானத்தில், தொழில்முனைவு என்பது சமூக வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வழியாகும்.  புதிய வர்த்தகங்களை உருவாக்குவதன் வழியே வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதையில் நாட்டை எடுத்து செல்ல முடியும்.

நாட்டுக்கும், சமூகத்திற்கும் ஈடுபாட்டுடன் செயல்பட்ட தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை நாம் இழந்து விட்டோம்.  தொழில்துறை மற்றும் சமூக மேம்பாட்டில் டாடாவின் பங்கு ஈடுஇணையற்றது.  உயர்ந்த நன்னெறிகள், வெளிப்படை தன்மை மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய தூய்மையான வணிக மேலாண்மை ஆகியவற்றுடன் அனைத்து சவால்களையும் அவர் எதிர்கொண்டார்.   

உலக அரங்கில் அவர், டாடா குழுமத்திற்கும் மற்றும் இந்தியாவுக்கும் தனிஇடம் ஒன்றை உருவாக்கினார்.  மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்பு உறுதியான முடிவுகளை மேற்கொண்டதற்காக எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார்.  கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,500 கோடி நன்கொடை வழங்கியவர்.

டாடா குழுமத்தின் அனைத்து ஓட்டல்களிலும், கொரோனா நோயாளிகள் தங்கும் வகையிலான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.   2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல் மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது, டாடா குழும நிறுவனத்தின் தாஜ் மகால் ஓட்டலும் இலக்காகி பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த கூட்டத்தில், மராட்டிய மக்களின் சார்பில் டாடாவுக்கு மந்திரி சபை அஞ்சலி செலுத்துகிறது.  இந்த வேதனையான தருணத்தில் டாடா குழுமத்துடன் நாங்கள் துணையாக இருக்கிறோம் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து