முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறை: பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      இந்தியா
Air-India 1

சென்னை, ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நவரத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

இதனால் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ. 4,200 என இருந்த நிலையில் தற்போது ரூ. 12,026-லிருந்து ரூ. 18,626-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை - தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ. 5006-ல் இருந்து ரூ. 11,736 முதல் ரூ. 13,626 வரை அதிகரித்துள்ளது. சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ. 3,290-ல் இருந்து ரூ. 10,996-ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை - சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ. 3317-ல் இருந்து ரூ. 10,792-ஆக அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை குறிவைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து