எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : நவம்பர் கர்நாடகா தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களிலும் கர்நாடகா மாநில கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவம்பர் 1-ம் தேதி கர்நாடகாவிற்கு முக்கியமான நாள். அன்றைய தினத்தை மாநில தினமாக (கர்நாடக ராஜ்யோத்சவா) கொண்டாடுகிறோம்.
கன்னட மொழி மற்றும் மாநிலத்தின் பெருமையை வளர்க்கும் வகையில் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், மற்றும் கல்வி மையங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அன்றைய தினம் கட்டாயமாக கர்நாடகா மாநில கொடியை ஏற்றி வைக்க கர்நாடக வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில் உத்தரவிடுகிறேன்.
தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் கன்னட மொழி மீது மாணவர்களிடையே அன்பையும், பாசத்தையும் வளர்க்கும் வகையில் கொண்டாட்டங்களை கட்டாயமாக நடத்த வேண்டும்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை போன்று நவம்பர் 1-ம் தேதியும் பள்ளிகள் மற்றம் கல்லூரிகளில் கலச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நவம்பர் 1-ம் தேதியன்று கன்னட மொழியை கொண்டாடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இந்த நாள் மாநிலம் உருவானதை குறிக்கிறது. மேலும் கன்னட மொழி மற்றும் மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


