முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் சிறையில் நடந்த நவராத்திரி விழா: ராம்லீலா நாடகத்தில் நடித்த 2 கைதிகள் தப்பியோட்டம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      இந்தியா
Jail-1

Source: provided

ஹரித்வார் : நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறையில் நடந்த ராம்லீலா நாடகத்தில்  வானரங்களாக வேடமிட்டு நடித்த 2 கைதிகள் சீதையை தேடுவதுபோல் நைசாக தப்பியோடினர். கைதிகள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத்  சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனுமானின் வானர  சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்த இரண்டு கைதிகள் சீதையை தேடுவதுபோல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர். 

ஆனால் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. அதன்பிறகே அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள்  உணர்ந்துள்ளனர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவனும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவனும் இணைந்து சிறையிலிருந்து தப்பிக்க வெகு நாட்களாகத் திட்டம் தீட்டி வந்ததாகத் தெரிகிறது. 

சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதிய அவர்கள் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடச் செல்லும் காட்சியில்  நைசாக நழுவி கட்டுமான பணிக்காக சிறையில் வைத்திருந்த ஏணியை பயன்படுத்தி  சிறைச் சுவரை தாண்டி வெற்றிகரமாக தப்பித்துள்ளனர். அவர்களை தேடும் பணியில்  போலீஸ் இறங்கியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து