எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 17-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளுக்கு, 2,310 இடங்கள் உள்ளன. இதற்கு, 6,190 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், தரவரிசை பட்டியல் கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 5,638 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு அடிப்படையில் நடக்க உள்ள மாணவர் சேர்க்கை வரும் 17-ம் தேதி துவங்குகிறது. முதல் நாளில், சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத அரசு பள்ளி ஒதுக்கீடுக்கான சேர்க்கை நடைபெறும். அதன்பின், 18, 26-ம் தேதி வரை பொது பிரிவினருக்கான சேர்க்கை நடக்கும்.
இந்த சேர்க்கை, சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நேரடி கவுன்சிலிங் முறையில் நடத்தப்படும் என, இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களை, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


