எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராவல்பிண்டி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
கடைசி டெஸ்ட்...
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 68.2 ஓவர்களில் 267 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி சுமித் 89 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
2ம் நாள் ஆட்டம்...
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 344 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 134 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரெஹான் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 77 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள்: எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ரூட் 5 ரன்களுடனும், ஹாரி புரூக் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
அடுத்தடுத்து அவுட்...
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியினர், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் புரூக் 26 ரன், ரூட் 33 ரன், ஸ்டோக்ஸ் 3 ரன், ஜேமி ஸ்மித் 3 ரன், அட்கின்சன் 10 ரன், ரெஹான் அகமது 7 ரன், ஜேக் லீச் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதன் காரணமாக இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சில் 37.2 ஓவர்களில் 112 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 36 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 3.1 ஓவரில் 1 விக்கெட்ட மட்டும் இழந்து 37 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.
புள்ளி பட்டியலில் ஏற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா (47.62 சதவீதம்) 4வது இடத்திலும், நியூசிலாந்து (44.44 சதவீதம்) 5வது இடத்திலும், இங்கிலாந்து (40.79 சதவீதம்) சில புள்ளிகளை இழந்து 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 7-வது (33.33 சதவீதம்), இடத்திற்கு வந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


