எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : நெல்லை நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு ஆனித் தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ம் தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 நாட்களாக தினமும் காலை, மாலை நேரங்களில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமி - அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதன்பின் மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன. சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும், பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன. வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


