Idhayam Matrimony

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      இந்தியா
Jail

மும்பை, நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் சல்மான் கான் மற்றும் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி பாபா சித்திக்யின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு மிரட்டல் அழைப்பு விடுத்ததாக 20 வயது நபர் நொய்டாவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நொய்டாவின் செக்டார் 39-ல் இருந்து மிரட்டல் விடுத்த முகமது தையப் என்பவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை மாலை பந்த்ராவில் உள்ள ஜீஷன் சித்திக் அலுவலகத்திற்கு, தாங்கள் கேட்கும் பணம் தரவில்லை என்றால் ஜீஷன் சித்திக், சல்மான் கான் ஆகியோர் கொலை செய்யப்படுவார்கள் என மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் நிர்மல்நகர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மிரட்டல் விடுத்த நபர் முகமது தையப் என்று போலீசார் கண்டுபிடித்தனர்" என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து