எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020 மே மாதம் நுழைய முயன்றது. இரு நாட்டு வீரர்களும் மோதி கொண்டனர். இதில் கால்வான் பகுதியில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளின் உறவு சீர்குலைந்தது.
இதனால் நான்கு ஆண்டுகளாக எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது. பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் தான் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி சில நாட்களாக இரு நாடுகளும் ராணுவத்தை வாபஸ் பெற்று வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன் இருந்ததுபோல், எல்லையில் ரோந்துப் பணிகளில் இருநாட்டு ராணுவமும் மீண்டும் ஈடுபடும். இது குறித்து, அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் நிருபர்களிடம் கூறியதாவது:
எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இரு நாடுகளும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ராணுவ படைகளை வாபஸ் பெற்றதை நாங்கள் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


