எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (3-ம்தேதி) முதல் 8-ந்தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதலில் ஆஸ்ரிரேலியாவிற்கு செல்லும் அவர், அங்குள்ள பிரிஸ்பேன் நகரில், ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ள 4-வது இந்திய தூதரகத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர் கான்பெர்ரா நகரில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்குடன் இணைந்து, 15-வது வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் (FMFD) நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார். அதோடு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர், ஊடக அமைப்பினர் மற்றும் அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இதன் பிறகு 8-ந்தேதி சிங்கப்பூர் செல்லும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் 8-வது ஆசியான்(ASEAN) வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். பின்னர் அந்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்தியா-சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


