முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி வலுவாக திரும்பி வரும்: நியூசி. கேப்டன் டாம் லாதம் நம்பிக்கை

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      விளையாட்டு
7-Ram-51-copy

Source: provided

மும்பை: இந்தியா மோசமான அணியாக மாறிவிடவில்லை எனவும், இந்திய அணி வலுவாக திரும்பி வரும் எனவும் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்... 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணி, யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3-0 என வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

வரலாற்று சாதனை...

விமர்சனங்களை சந்திக்க முடியாமல் இந்திய அணி திணற, பாராட்டு மழையில் நனைந்தது நியூசிலாந்து. இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றதுடன், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாற்று சாதனையையும் படைத்தது நியூசிலாந்து. இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு தாயகம் திரும்பிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம், இந்தியா மோசமான அணியாக மாறிவிடவில்லை எனவும், இந்திய அணி வலுவாக திரும்பி வரும் எனவும் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தரமான அணி...

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய கிரிக்கெட் பொதுவாக உண்மையில் சிறப்பானது. இந்தியாவுக்கு எதிராக அதிக போட்டிகளில் நாங்கள் விளையாடியுள்ளோம். அவர்களுடன் ஐபிஎல் தொடரில் இணைந்து நியூசிலாந்து அணி வீரர்கள் விளையாடியுள்ளனர். தோல்வியடைந்திருந்தாலும், இந்திய அணி மிகவும் தரமான அணி. ஒரே நாளில் இந்திய அணி மோசமான அணியாக மாறிவிடாது. அவர்கள் கண்டிப்பாக இந்த தோல்வியிலிருந்து வலுவாக மீண்டு வருவார்கள் என்றார். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து