Idhayam Matrimony

பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் இனி அளவு எடுக்கக்கூடாது : உ.பி. மகளிர் ஆணையம் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
National-Commission 2023 06

Source: provided

லக்னோ : பெண்களுக்கான பாதுகாப்பை  உறுதிப்படுத்த பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக்கூடாது என உ.பி. மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கடந்த 28-ம் தேதி லக்னோவில் ஆலோசனை நடத்தினர். பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

அப்போது, பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக் கூடாது. முடி திருத்தும் கடைகளில் பெண்களுக்கு பெண்கள் முடி திருத்த வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். 

பெண்களை கெட்ட தொடுதலில் இருந்து பாதுகாக்கவும், ஆண்களின் தவறான எண்ணங்களை தடுக்கவும் இந்த பரிந்துரைகள் வழிவகுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இது தொடர்பாக சட்டங்களை உருவாக்குமாறு மகளிர் ஆணையம் மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து