எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ.தெரிவித்தார்.
இது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது-
அக்டோபர், நவம்பர்,டிசம்பர் மூன்று மாத காலங்களிலே நமக்கு வடகிழக்கு பருவமழை இருக்கும். தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பெரும்பாலான இடங்களிலே 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் தமிழகத்தில் இன்று (நேற்று)கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்,மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பொழிந்து இருக்கிறது
தற்போது வடகிழக்கு பருவமழையில் தமிழகத்தில் 34 பேர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் வருகிறது. தமிழக முழுவதும் கடந்த மாதம் மழைக்கு மட்டும் 9 பெண்கள்,2 குழந்தைகள் 15 ஆண்கள் பேர் பலியாகிவிட்டது என்பது நமக்கு ஒரு வேதனை தரக்கூடிய செய்தியாக நாம் பார்க்கிறோம்.அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி எடுத்தார்கள் என்பதற்கு இந்த உயிரிழப்பு என்பது நமக்கு அதனுடைய தோல்வியை நமக்கு காட்டுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் வடகிழக்கு பருவமழை தோல்வி காரணத்தால் 34 பேர்கள் பலியாகி உள்ளனர். இந்த வடகிழக்கு பருவ மழையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எந்த உயிரிழப்புகள் இல்லாமல் எதிர்கொள்வோம் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்,அமைச்சர்களும் கூறினார்கள்.ஆனால் இன்றைக்கு நிலவரம் கலவரமாக மாறிவிட்டது.
ஆனால் இன்றைக்கு 34 பேர் பலி மட்டுமல்லாது. 500 கால்நடைகள் மழையால் இறந்து போய் உள்ளன.மழையால் 864 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது, அதேபோல் மழைநீரில் 89,000 ஏக்கர் வேளாண் பயிர்கள் மூழியுள்ளன, இதில் 5,856 ஏக்கர் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. 919 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது,முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று அரசு சொன்னது ஆனால் இன்றைக்கு உயிர் சேதம்,பொருள் சேதம் இன்றைக்கு எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மதுரையில் பெய்த இரண்டு நாள் மழைக்கே தத்தளித்தது, கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசியது ,பணியாளர்கள் இல்லை, மீட்பு பணியாளர்கள் இல்லை
இதனால் மீட்பு நடவடிக்கை இல்லை. அமைச்சர்கள் முகாமிட்டுள்ளார்கள் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தும் துறை வரியாக இடைவெளி ஏற்பட்டது.துறைக்குள் ஒருங்கிணைப்பு குழு அவசியம், ஆனால் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படவில்லை. துப்புரவு பணியாளர் பற்றாக்குறை,பம்பு செட் பற்றாக்குறை , கேபிள் மற்றும் பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களை சரிவர மூடவில்லை இதனால் நீர் தேக்கம் ஏற்பட்டு மதுரையே ஸம்பித்தது இதற்கு முழுமையான தீர்வு காணப்படவில்லை.
இதற்கு முழுமையான தீர்வை காண தாழ்வான பகுதிகளை கண்டறிந்து கூடுதலாக கவனத்தை செலுத்த வேண்டும், அதேபோல் குழுக்களை தயார் நிலை அமைக்கப்பட வேண்டும், மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் தற்போது அக்டோபர் மாதம் முடிந்து விட்டது நவம்பர் டிசம்பர் 2 மாதங்கள் உள்ளது.இந்த நவம்பர்,டிசம்பர் காலங்களில் இருக்கக்கூடிய சூழ்நிலையிலே இந்த அரசு விழித்துக் கொள்ளுமா?. முதலமைச்சர் துறை வாரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். ஆய்வு கூட்டம்,மற்றும் அறிக்கையால் மக்களை காப்பாற்ற முடியாது. களப்பணியால்தான் காக்க முடியும். விளம்பரம் வெளிச்சம் மக்களுக்கு பயன் தராது. வடகிழக்கு பருவமழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்
ஆனால் அரசு காது கொடுத்து கேட்கவில்லை. இந்த அரசிடம் கனிவு ,அக்கறை இல்லை ஆனால் ஆணவ போக்குடன் உள்ளது இது அழிவுக்கு தான் கொண்டு செல்லும் இது மக்களுக்கு விடியல் தேடுகின்ற முயற்சியாக நமக்கு காணவில்லை மக்களை நீங்கள் கைவிட்டால் மக்களை உங்களை கைவிடும் காலம் நிச்சயம் வரும். இன்றைக்கு மக்களே அரசு காப்பாற்றாது,
நமக்கு நாமே காப்பாற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது என்று கூறி வருகிறார்கள். ஆகவே வருகின்ற வடகிழக்கு பருவமழையில் முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


