முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்
Grama-Sabha 2024 08 08

Source: provided

சென்னை : தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 

கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் வரும் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்றும், கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து வெளியான அறிக்கையில்,   தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள எதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம். நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

மேலும், வரும் 23-ம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும். கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி  மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை வரும் 23-ம் தேதி அன்றே இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து