முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-2 தேர்வில் கூடுதலாக 213 காலி பணியிடங்கள் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை : குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. இதில் நேர்முக தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முக தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் அடங்கும்.

இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்பட்டு அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவை எதிர்பார்த்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், முழு நேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலை கண்காணிப்பாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நேர்முக எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப்-2 தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து