முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா செல்கிறார் பிரதமர் மோடி

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
Modi 2023-08-21

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி, வரும் 16-ம் தேதி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்குச் செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை முடித்துக் கொண்டு பிரேசில் மற்றும் கயானாவிற்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார்.

பிரதமர் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: 

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நைஜீரியா செல்கிறார். இந்த இரண்டு நாள் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். 17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். புலம்பெயர்ந்த இந்தியர்களின் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுவார்.

வரும் 18, 19-ம்  தேதிகளில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார். பிறகு, 19-ம் தேதி முதல் 21-ம் தேதிகளில் கயானாவுக்கும் செல்கிறார். 1968-க்கு பிறகு கயானாவிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.  அங்கு நடக்கும்  உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து