முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த வழக்கறிஞர்கள் 10 பேரின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      தமிழகம்
CM-2 2024 11 13

Source: provided

சென்னை : உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம்  ஒரு கோடி ரூபாய்க்கான நிதியுதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். 

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியமானது உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக நிறுவப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து பயனாளிகளுக்கு வழங்குப்படும் நிதியுதவி முதல்வர் மு.க. ஸ்டாலின்   தலைமையிலான அரசால் 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

மேலும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிக்கு வழங்கப்படும் அரசின் ஆண்டு மானியமும் 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.   அந்த வகையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நலநிதியத்திலிருந்து உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், அவ்வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கினார்.

இந்த நிகழ்வில்,  அமைச்சர்  ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான  பி.வில்சன், தலைமைச்செயலாளர் முருகானந்தம்,  உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  தீரஜ் குமார்,  சட்டத்துறை செயலாளர்  ஜார்ஜ் அலெக்சாண்டர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் அமல்ராஜ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர்  பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர்  ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர்  கார்த்திகேயன்,  மூத்த வழக்கறிஞர்  விடுதலை, இணைத் தலைவர்கள்  அருணாசலம்,  மோகனகிருஷ்ணன்,  மாரப்பன்,  அசோக்,  ஸ்ரீமுருகா,  சரவணன், கௌரவ செயலாளர்  அய்யாவு, செயற்குழு தலைவர்  பிரிஸ்சில்லா பாண்டியன்,  உறுப்பினர்கள்  வரதன்,  சந்திரமோகன்,  பால்கனகராஜ்,  வேல்முருகன்,  கதிரவன்,  கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து