Idhayam Matrimony

குஜராத் அணிக்கு பயிற்சியாளர்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      விளையாட்டு
IPL 2023 08 02

Source: provided

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.

இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குஜராத் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்தீவ் படேல் 139 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி 2848 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________

மே.இ.தீவுகள் வீரர் விலகல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கணுக்கால் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் அதில் இரண்டிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

பார்படாஸில் நடத்த முதல் ஆட்டத்தில் போது ஆண்ட்ரே ரஸ்ஸல் கணுக்காலில் காயமடைந்தார். அதன்பின்னர் காயத்தால் அவதிப்பட்ட அவர் 2-வது போட்டியில் விளையாடவில்லை. தொடரை தக்கவைக்க மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும், அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் சமர் ஸ்பிரிங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியின் போது கேப்டன் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இரண்டு போட்டிகளில் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

___________________________________________________________

முதலிடத்தை பிடித்தார் அப்ரிடி

பாகிஸ்தானில் அடுத்தாண்டு சாம்பியஸ் டிராபி நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அஃப்ரிடி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் தொடரை வென்றதற்கு உறுதுணையாக இருந்த ஷாகின் ஷா அஃப்ரிடி 12.62 சராசரியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தற்போது மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 2-வது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் 3-வது இடத்திலும் உள்ளனர்.

மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஹாரிஸ் ராஃப் 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருது வென்றதுடன் 14 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 4-வது இடத்திலும், பும்ரா 6-வது இடத்திலும், முகமது சிராஜ் 8-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து