முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பராரி விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      சினிமா
Ferrari-Review 2024-11-26

Source: provided

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.

கூலி வேலைகளை மட்டுமே நம்பியிருக்கும் இரண்டு பிரிவினரும் சொந்த ஊரில் வேலை இல்லாத காலங்களில் வேலைக்காக கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைக்கு செல்கிறார்கள். அங்கு இரண்டு பிரிவினரும் தமிழர்கள் என்பதால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?, என்பதை, உள்ளூரில் “நான் பெரியவன், நீ தாழ்ந்தவன்” என்ற ஆதிக்க மனநிலையில் வாழும் சில மனிதர்களை யோசிக்க வைக்கும் வகையில் சொல்வது தான் ‘பராரி’.

நாயகனாக நடித்திருக்கும் ஹரிசங்கர், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்பதை தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சங்கீதா கல்யாண், எளிமையான முகம், வலிமையான நடிப்பு என்று படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் கதாபாத்திரமாகவே பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எளிய மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமாக படமாக்கியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி, மக்களிடையே இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கான அரசியல் பின்னணியை தைரியமாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், ‘பராரி’ சாதி பாகுபாட்டுக்கு சரியான சவுக்கடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து